தொழில்நுட்பம்

பிரிக்ஸ் மாநாட்டில் வர்த்தக வசதிகளுக்கு முன்னுரிமை – எப்.ஐ.இ.ஓ. கோரிக்கை

டெல்லியில் வரும் செப்டம்பர் 12, 13ஆம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு எப்.ஐ.இ.ஓ. வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் விரைவான சுங்க நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.மேலும், சரக்கு போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்புகளை மேம்படுத்தி, ஏற்றுமதி செலவு மற்றும் காலதாமதத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் சர்வதேச வர்த்தகத்தில் அதிகளவில் பங்கேற்கும் வகையில் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என எப்.ஐ.இ.ஓ. கேட்டுக்கொண்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button