
சென்னையில் இந்தியா – கஜகஸ்தான் நாடுகள் பங்கேற்ற வர்த்தக கருத்தரங்கு நடைபெற்றது . இதில் கஜகஸ்தானின் வர்த்தகம் மற்றும் ஒருங்கிணைப்புதுறை இணை அமைசர் ஐதர் அபில்டகோவ் தலைமையிலான குழுவினரை தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சந்தித்து உரையாடினார். அப்போது, கஜகஸ்தானை சேர்ந்த மோட்டார் வாகனம், மருந்து உள்ளிட்ட 65 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.




