செய்திகள்

திருநெல்வேலி : அரிவாளுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிராஜா. இவர் கையில் நீளமான அரிவாளுடன் இருப்பது போன்ற காட்சிகளை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும், இது குறித்து தகவலறிந்த போலீசார், இசக்கிராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், அவரிடமிருந்த செல்போன் மற்றும் வீடியோவில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் அரிவாளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இசக்கிராஜா மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button