திண்டுக்கல் அருகே உள்ள வாழக்காய் பட்டியில் அருள்மிகு ஸ்ரீமுத்தாலம்மன், கோயிவில் திருவிழா 14 ஆண்டு பிறகு கடந்த 8, ஆம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 3 ம் நாள் திருவிழாவில் முத்தாலம்மன் கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து, பால்குடம் அக்னிச்சட்டி எடுத்தும் ஏராளமான நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் மரம் ஏறும் நிகழ்ச்சியும் முக்கியத்துவமும் வாய்ந்தது.
பாரம்பரிய வழக்கப்படி இந்த கழுகு மரம் ஏறும்
நிகழ்ச்சிக்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மரத்தை எங்கு வெட்டனும்னு என்று முத்தாலம்மன்யிடம் திசை குறித்து குறி கேட்டு அதன் படி ஊரின் அருகே உள்ள இருந்த சுமார் 40 அடி உயரமுள்ள மரத்தை ஐதீகப்படி
வெட்டி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து கோயில் முன்பு ஊன்றப்பட்டது
பின்னர் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் குறிப்பாக ஏராளமான இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக வழுக்கு மரத்தில் ஏறி அதன் உச்சியை அடைய முயற்சித்தனர்
தொடர்ந்து அதன் உச்சியை அடைந்து இளைஞர்கள் முத்தாலம்மன் பாதத்தில் பூஜிக்கப்பட்ட பூஜை பொருட்களை கைப்பற்ற இளைஞர்கள் போராடினர்.
முன்னதாக படுகளம் போடப்பட்டு பின்னர் இளைஞர்கள் கடும் போராட்டம் இளைஞர்
கழுகு மரத்தின் உச்சிக்குச் சென்று அங்கு கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்களை எடுக்கத்தானர்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திருக்கோயில் முன்பு மைதானத்தில் பக்தியுடன் கமுகு மரம் ஏறும் நிகழ்ச்சியை பார்த்தனர் மேலும் சில பெண்கள் சாமி வந்தது அம்மனை வழிபட்டனர்.
பின்னர் பட்டத்து அரசி முத்தாலம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் பக்தர்கள் முன்பு ஆடி வந்து ஓடி வந்து மற்றவர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு தன் பயணத்தை துவங்கிய போது
18 பட்டி ஊர்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அம்மனை பக்தி பரவசத்துடன் ஆடி,பாடி வழி அனுப்பி வழிபாடு செய்தனர்.
