க்ரைம்

மயிலாடுதுறை : மனைவியின் கோடிக்கணக்கான சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கும் வழக்கறிஞர் மீது கணவர் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வர்த்தக சங்கத் தலைவராக உள்ள பாலையா, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சீர்காழி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அவரது மனைவிக்காக வழக்கறிஞர் கணேசமூர்த்தி ஆஜராகி வருகிறார். இந்நிலையில், வழக்கறிஞர் கணேசமூர்த்தி தனது மனைவியை அபகரித்துக் கொண்டதாகக் கூறி, பாலையா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது வழக்கறிஞர் கணேசமூர்த்திக்கும் பாலையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர் தனது மனைவி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க வழக்கறிஞர் கணேசமூர்த்தி முயற்சிப்பதாக பாலையா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்தப்புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button