
World Cup FIFA 2026 மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்பெயின் அணி உலக கோப்பையை தட்டிச் சென்றது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ஆர்வமுடன் பார்த்துச் சென்ற திண்டுக்கல் ரசிகர்கள்.

உலகம் முழுவதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வேர்ல்ட் கப் 2026 நடந்து கொண்டிருந்தது இன்று அதன் இறுதிப் போட்டி நடைபெற்றது. அதனை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி கால்பந்து மைதானத்தில் திண்டுக்கல் கால்பந்து கழகம் பெரிய LED ஸ்க்ரீன் திரையில் ரசிகர்கள் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 4,000 மேற்பட்ட ரசிகர்கள் அதனை கண்டு களித்தனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாடின. இந்த இறுதிப் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்பெயின் அணி உலக கோப்பையை தட்டிச் சென்றது. இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை திண்டுக்கல் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் எதிர்பார்ப்புடனும் LED திரையில் கண்டு களித்தனர். நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா தற்பொழுது இந்த வருடம் அர்ஜென்டினா அணியை உலகக் கோப்பை தட்டிச்செல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் மத்தியில் 2010 க்கு பிறகு ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை தட்டிச் சென்றது.
இந்த வெற்றி ரசிகர்களுக்கிடையே மிகுந்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் கடைசி நிமிடம் வரை அர்ஜென்டினா அணிய உலகக் கோப்பை தட்டிச்செல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மத்தியில் ஸ்பெயின் அணி உலக கோப்பையை தட்டி சென்றது. இந்த உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியை திண்டுக்கல்லில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என சுமார் 4000 மேற்பட்டோர் கண்டு களித்தனர்.
இந்தப் போட்டி குறித்து ரசிகர்கள் கூறியதாவது :
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டி என்று நடைபெற்றது அதில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதினர் இந்த போட்டியில் கடைசி நொடி வரை அர்ஜென்டினா அணியே வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 2010 க்கு பிறகு ஸ்பெயின் அணி மீண்டும் இரண்டாவது முறையாக கால்பந்து விளையாட்டின் உலகக் கோப்பையை வென்றது.
கிரிக்கெட் மட்டுமே பெரிதாக எண்ணப்பட்ட இந்த தருணத்தில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும் மிக விறுவிறுப்பாக இருந்தது என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெண் ஒருவர் கூறியதாவது:
கால்பந்தாட்ட வீரர் மெசி அவர்களுக்காகத் தான் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தான் காண வந்ததாகவும் ஆனால் மெஸ்ஸி பங்குபெற்ற இந்தப் போட்டியில் அவர்களது அணி தோல்வியுற்றது எனக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்படுத்தி தாகும் ஆனால் இந்த உலகக் கோப்பை இல்லையெனில் அடுத்த உலக கோப்பை போட்டியில் கண்டிப்பாக மெஸ்ஸி வெற்றி பெறுவார் என்று அப்பன் கூறினார்.
இந்த கால்பந்து உலகப் போட்டி குறித்து வித்தியாசமான கருத்து கூறிய ரசிகர்:
இதுவரை நடந்த உலக கால்பந்து அரை இறுதி போட்டிகளில் இந்த வருடம் நடந்த அறி இறுதி போட்டியிலேயே நான்கு அணிகள் பங்கு பெற்றதாக அவர் கூறினார் மேலும் ரசிகர்கள் எப்பொழுதும் பொதுவாக அவர்களது வீட்டிலேயே அல்லது பொதுவான இடங்களிலேயே கால்பந்து போட்டிகளை கண்டு களிப்பினர் ஆனால் இந்த வருடம் திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் திண்டுக்கல் கால்பந்தாட்ட கழகம் ஏற்பாடு செய்திருந்த மிகப்பெரிய எல்இடி திரையில் உலக கோப்பை போட்டியை கண்டு களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
