
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான காமராஜ் தலைமையிலான வழக்கறிஞர்கள், நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிலர் குழந்தைகளை கட்டாயப்படுத்தியும், கடத்தியும் பிச்சை எடுக்க வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் கும்பலை கண்டறிந்து, இது போன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
