
தாம்பரம் சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவி தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு மாணவியின் தாய் பணிக்கு சென்றிருந்தபோது மாணவியும் அவரது தம்பியும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பதுவஞ்சேரியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் மாணவியின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, மாணவியின் தம்பியை தேநீர் வாங்கி வருமாறு வெளியே அனுப்பிவிட்டு தனியாக இருந்த மாணவியிடம் ஆனந்தராஜ் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, மாணவியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து ஆனந்தராஜை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைத்தனர்.