க்ரைம்

பெரம்பலூர் : கிராவல் மண் கடத்தல் புகார் – திமுக நிர்வாகி கைது

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியைச் சேர்ந்த கே.சி.ஆர். குமார், திமுக ஆதிதிராவிடர் நலப்பிரிவு மற்றும் வர்த்தக அணியில் நிர்வாகியாக உள்ளார். இவருக்குச் சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷரில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், இரவு நேரங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாகவும் கிராம மக்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடைப்படையில், பெரம்பலூர் போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், இது குறித்து கே.சி.ஆர். குமார் மற்றும் ஓட்டுநர் ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த தகவலறிந்த திமுகவினர் மற்றும் குமாரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் திரண்டு போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டடு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கே.சி.ஆர். குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button