
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் மீண்டும் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மதுரையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுவதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் மீண்டும் தெரிவித்தார்.
