
தென்காசியைச் சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரியும், மதிமுக ஆலோசகருமான ராஜா முகமது மறைவையடுத்து, அவரது இல்லத்திற்கு சென்ற வைகோ அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ராஜா முகமதுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஆளுங்கட்சியின் பிரதிநிதியைப் போல் செயல்படாமல் நடுநிலையுடன் செயல்பட்டு வருவதாகவும், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.