
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மஹாதேவ் டூரிசம் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் இமய யாத்திரை சென்ற 49 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை என நிறுவனத்தின் உரிமையாளர் மாறவேல் தெரிவித்துள்ளார். யாத்திரிகர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள இமிகிரேஷன் அலுவலகம் அருகே ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் கட்டிடம் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பேரிடர் பாதித்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து, யாத்திரிகர்களின் நிலை குறித்து தகவல் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளனர்.



