
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சின்னமநாயக்கன்கோட்டையில் பாலமுருகன்(34) என்பவா் ஆட்டுக் கிடையிலிருந்து
S.தும்மலப்பட்டியை சோ்ந்த கோகுலகிருஷ்ணன்(20), சௌந்தரபாண்டியன் (25) ஆகிய 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் ஆடு திருட முயன்றனர்
பாலமுருகன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆடு திருடிய கோகுலகிருஷ்ணனையும், சௌந்தரபாண்டியனையும் மடக்கிப் பிடித்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்தலகுண்டு போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பைக், ஆடு ஆகியவற்றை பறிமுதல் செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்