சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.
தமிழ்நாட்டில் ராஜினாமா செய்த சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என முக்கிய கோரிக்கையாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கிறோம்.
குதிரை பேரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,மூத்த கட்சி தலைவர்கள் பிரதமரையும்,இந்திய தேர்தல் ஆணையம் சந்திக்க வேண்டும்.
குதிரை பேரத்திற்கு முற்றுபுள்ளி வைக்க கட்சி தாவல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் ஒன்றிய அரசு முயற்சிக்க வேண்டும்.தமிழுககத்தில் ஆன்லைன் கேமின் அதிகமாக இருக்கிறது அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகதாது அணை பிரச்சனையில் தமிழக அரசு மெத்தன போக்கை மேற்கொண்டு வருகிறது.அரசியல் காரணத்திற்காக தமிழகத்தின் உரிமையை காம்ப்ரமைஸ் செய்து வருகிறது த. வெ. க அரசு.மது போதை தமிழகத்தில் இல்லாத வகையில் அக்டோபர் இரண்டாம் தேதி சென்னையில் மிகப்பெரிய மாரத்தான் நடத்த முடிவு செய்துள்ளோம்*.அரசியல் சார்பில் இல்லாமல் இந்த மாரத்தான் நடைபெறும்..
கேபினட் ஆலோசனை கூட்டம் மற்றும் தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு கலந்து கொள்வது எந்த வகையில் நியாயம். மோசமான நிலையில் தமிழகம் சென்றுக்கொண்டு இருக்கிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பதற்கு வடிகட்டிய நிலையில் தான் சந்திக்க அனுமதி வழங்கபட்டு வருகிறது.அந்த அளவிற்கு தமிழகம் உள்ளது..
மாற்றத்தை கொடுப்பதற்கு பதிலாக ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் முதல்வர் விஜய்.விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் பிரச்சனைகளை செவி கொடுத்து கேட்கவில்லை.யாரெல்லாம் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே தமிழக முதல்வரை பார்க்கும் நிலையில் தான் தற்போது தமிழக அரசு உள்ளது*.
த. வெ. க அரசு புகழ் பாடும் புலவராக வை.கோ மாறிவிட்டார்.

