
கன்னியாகுமரி மாவட்டம்தேங்காய் பட்டணம் அருகே உள்ள கீழ்குளம் பருத்திவிளை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி . அதே பகுதியில் உள்ள கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவதினம் மாலையில் பள்ளி முடிந்து சிறுமி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கீழ்குளம் கிராமநிர்வாக அலுவலகம் பகுதியில் சாலையில் மாணவி நடந்து செல்லும் போது, இருசக்கர வாகனம் ஒன்றில் ஹெல்மெட் அணிந்து வேகமாக வந்த நபர் திடீரென மாணவியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனடியாக மாணவி சத்தம் போட்டார். வினிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, இருசக்கர வாகனத்தில் வந்தவர் அங்கிருந்து தப்பித்து ஓடி சென்று விட்டார்.
இதை அடுத்து மாணவியின் தந்தை வின்சென்ட் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக கீழ்குளத்தை அடுத்த பரக்கன்விளை என்ற இடத்தை சேர்ந்த பென்டவின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது திருட்டு உட்பட 14 வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

