தேர்தல் நேரத்தில் செத்த பாம்பை அடித்துக் கொண்டு கருநாகத்தை விட்டு விட்டோம் அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம்
திருமாவளவன் குறித்து கேள்வி எழுப்ப முற்பட்டபோது கூட்டணி கட்சிகள் குறித்து இனி பேச போவதில்லை எங்கள் கருத்துக்கள் மக்களிடம் சென்று சேராமல் இவை தான் பேசப்படுகிறது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேட்டி
6 மாதத்தில் மு க ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என்று அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது குறித்த கேள்விக்கு அது அவருடைய விருப்பம் அதில் குறுக்கீடு செய்ய விரும்பவில்லை என ஆர் எஸ் பாரதி பதில்.
திமுக சார்பில் த வெ க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக 2ஆவது முறையாக ஆளுநரிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்தை குறிப்பிட்டும் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை த வெ க விலைக்கு வாங்க முற்பட்டதாக ஆளுநரிடம் திமுக புகார் அளித்திருந்தது.
தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் த வெ க தங்களை அணுகினார்கள் பிடித்திருந்தது நாங்கள் இணைந்து கொண்டோம் என்று பேசியதை குறிப்பிட்டு இன்று மீண்டும் திமுக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக வழக்கறிஞர் மருதுகணேஷ் ( மாநில துணை செயலாளர் – திமுக சட்டத்துறை ) மற்றும் திமுகவின் தலைமைக் கழக வழக்கறிஞர் கவி கணேசன் ஆகிய இருவரும் மக்கள் பவனில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வழங்கிய மனுவை வழங்க சென்றனர் ஆளுநர் இல்லாததால் ஆளுநர் செயலாளரிடம் மனு அளித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,
தமிழக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என்பதை திமுக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் நீதிபதிகள் அதாவது கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் விசாரிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு என்றாலும் அவர்களிடம் தெரிவிக்கலாம் என்று உத்தரவிட்டதால், திமுக சார்பில் கரூர் சம்பவம் குறித்து விஜய் பேச்சு உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் உண்மைக்கு மாறாக வழக்கை பாதிக்கும் வகையில் அவர் பேச்சு அமைந்துள்ளது என்று தெளிவாக கமிட்டிக்கு, அனுப்பி உள்ளோம் அந்த மனுவை சிபி ஐ க்கும் அனுப்பி உள்ளார்கள்.
கடந்த 10 ஆம் தேதி கரூரில் விஜயின் பேச்சு எவ்வளவு தில்லுமுல்லுகள் நடை பெற்றது என்று எல்லோரும் நன்றாக அறிவார்கள்.
குறிப்பாக குதிரை பேர ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு ஏற்கனவே 4 ஆம் தேதி ஆளுநரை நானும் குழுவினரும் சந்தித்து புகார் கொடுத்தோம்.
அந்த புகாரில் வைகோ அவரின் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அவர்களுக்காக விஜய் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்ததாக பேசியது எல்லாருக்கும் தெரியும், அதேபோல் விஜயபாஸ்கர் வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் என்னை த வெ க அழைத்தார்கள் என்று சொன்னது குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கு தகுந்த ஆதாரம் என்று சுட்டி காட்டும் வகையில் புகார் கொடுத்துள்ளோம்.
விஜய் அவர்கள் பேச்சில் உண்மைக்கு புறம்பான எவ்வளவு கருத்துக்கள் உள்ளது. அவர் பேசிய பேச்சை பார்த்திருப்பீர்கள்.
கொளத்தூரில் கொத்து புரோட்டாவாக ஆகிவிட்டார்கள் என்று கீழ்த்தரமாக பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை அதிமுகவினர் நாங்கள் சாப்பிட்டு போட்ட இலை தான் என்று சொல்லி உள்ளார்.
இது போன்ற அரசியல் பேச்சுகளை விஜய் பேசினால் நாங்களும் பேச வேண்டிய நிலைக்கு வந்து விடுவோம்.
எச்ச இலைகளை வைத்து விழா நடத்திவிட்டு மிகப்பெரிய பொய்யை சொல்கிறார்.
கரூரில் அறநிலையத்துறை சார்பில் அரசு எடுத்துக் கொண்டது என்று அதற்கு விஜயபாஸ்கர் மனு கொடுப்பது போலவும் அதை விஜய் ஏற்றுக்கொள்வது போலவும் செயல்படுத்தினார்கள் இது 10 ஆம் தேதி நடந்தது ஆனால் அரசாணை 9 ஆம் தேதியே போடப்பட்டு விட்டது.
உடனடியாக உத்தரவு போட்டது போல் நாடகம் நடத்துகிறார்கள்.
திமுக எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.
ஏற்கனவே திமுக, அதிமுக, பாஜக தரப்பில் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் என்பது குறித்த கேள்விக்கு,
இதற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம்.
நீதிமன்றத்திற்கு சென்றால் ஆளுநர் தான் அங்கு தலைமை அவரிடம் கொடுத்துள்ளீர்களா என்று கேட்பார்கள். அதனால் ஆளுநரிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.
ஆளுநருக்கு நேரம் கொடுக்க வேண்டும் அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நியாயமான கால அவகாசம் வழங்குவோம். அந்த கால அவகாசத்திற்குள் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்.
முன்னாள் அனிதா ராதாகிருஷ்ணன் 6 மாதத்தில் முதலமைச்சராக மு க ஸ்டாலின் வருவார் என்று பேசியது குறித்த கேள்விக்கு,
அது அவருடைய விருப்பம் . அவர் ஆசைக்கு குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை.
கூட்டணி கட்சிகள் பற்றி கேட்டு திசை திருப்ப வேண்டும் அது தான் மக்களிடம் சென்று சேருகிறது முக்கியமானது சென்று சேர்வதில்லை.
கடந்த தேர்தலில் செத்த பாம்பை அடித்து கொண்டு இருந்தோம். கரு நாகம் உள்ளே புகுந்துவிட்டது அந்த தவறை தொடர்ந்து செய்ய விரும்பவில்லை
ஆளுநர் இல்லாத காரணத்தால் ஆளுநர் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

