க்ரைம்

சேலம் : தண்ணீர் தொட்டிகளில் பெண்களின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு – மூவர் கைது

சேலம் குகை பகுதியில் பூசாரியாக வசித்து வரும் ரமேஷ், தனது குடும்பத்துடன் கும்பகோணம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், மறுநாள் காலை வீட்டின் தண்ணீர் தொட்டியை திறந்த போது, அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் தொட்டிக்குள் பார்த்த போது, மூன்று மூட்டைகளில் உடல் பாகங்கள் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கிடையே, அருகிலுள்ள மற்றொரு வீட்டின் தண்ணீர் தொட்டியிலும் ஒரு மூட்டை கண்டெடுக்கப்பட்டது. அதனை சோதனை செய்த போது, அதில் பெண்ணின் உடல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் சேலம் தாதனூரைச் சேர்ந்த தங்கமணி என்பதும், அவர் சமையல் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. தங்கமணியின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில தகவல்களும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த வழக்கில் 3 பேரை கைது செய்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button