
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கருப்பட்டி முனியசாமி கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆங்காங்கே கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கீழக்கரையைச் சேர்ந்த ஜாரிக் அகமது, ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்த நிசந்தன், அஜய்குமார் மற்றும் அப்துல்ரகுமான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து சுமார் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
