
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடி வீதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த சின்னம்மாள் என்ற மூதாட்டியை பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், மூதாட்டியைத் தாக்கி கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த சுமார் 40 சவரன் நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், மூதாட்டியின் முகத்தை சிதைத்ததுடன், உடலையும் தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
