க்ரைம்

FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி ரூ.150 கோடி மோசடி – 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை – முகவர்களை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு

மதுரை மாவட்டம், மேலூர் கட்டயம்பட்டியில் இயங்கி வரும் FQL,AG,MAINS APP என்ற பெயரில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயம்பட்டியில் ரஞ்சித் என்பவர் தலைமையில் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் FQL எனப்படும் செயலி மூலம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் நபர்களின் வீடுகளை பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் (இன்று ஆக.28) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FQL செயலியில் ரூ.54,000 முதலீடு செய்தால் 45 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும் தொடர்ந்து முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறி பொதுமக்கள் கவரப்பட்டதாகத் தெரிகிறது. இதனை நம்பி நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ரெட்டியபட்டி , வத்திபட்டி விளாம்பட்டி , என். புதுக்கோட்டை , பட்டனம்பட்டி , மூங்கில்பட்டி கிராமங்களை
சேர்ந்த 8500 பேர் சுமார் ரூ.150 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக கூறபடுகிறது.

கடந்த சில மாதங்களாக செயலியில் முதலீடு செய்தவர்களுக்கு அமெரிக்க டாலரில் பணம் கிடைத்து வந்ததாகவும் அதை அவர்கள் திரும்பப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து மேலும் பலர் புதிதாக செயலியில் இணைந்து முதலீடு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக செயலியில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், விஜய் ஆகியோர் வீடுகளின் முன் 500-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டோர் வெள்ளிக்கிழமை திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் செயலி மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மேலூர் மற்றும் நத்தம் போலீஸார் ஆய்வாளர் பொன்குணசேகரன், வாட்டாட்சியர் டேனியல் பிரேம்குமார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் உடன்படாத பொதுமக்கள் ரமேஷ் என்பவரின் வீட்டில் ஜன்னல் மற்றும் ஏசியை உடைத்து தொடங்கினர். அதனால் அந்த இடத்தில் பரபரப்பாக காணப்பட்டது. சம்பவத்திற்குபின் வந்த ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினர். இந்த பேச்சுவார்த்தை ஆறு மணி நேரம் நீடித்த நிலையில் ரமேஷை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்ற முயன்ற போது அவர்களை தடுத்து நிறுத்து வாக்குவாதத்தில் பொடுமக்கள் ஈடுபட்டனர். ரமேஷை போலீசார் வாகனத்தில் அழைத்து செல்ல முயன்ற போது அவர்களை தடுத்து நிறுத்து வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அதை மீறி போலீஸில் வாகனத்தில் ஏற்ற முயன்ற போது கற்கள் மற்றும் செருப்புகளை வீச தொடங்கினர். இதனால் வண்டி சேதமடைந்தது அந்த பகுதி போர்க்களம் போல் சிறிது நேரம் காட்சியளித்தது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி இதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து தற்போது கலைந்து சென்றுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button