
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு, ஆட்டோவில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில்,சம்பவ இடத்திலேயே சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். மேலும்,10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
