க்ரைம்
Trending

பட்டா கேட்டு குளத்துப் பகுதியில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள் செயலால் பரபரப்பு – ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் உதவியுடன் அகற்றிய அதிகாரிகள் – 50க்கும் மேற்பட்டோர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லப்ப நாயக்கன்பட்டி தாதன் குளத்தில் திடீரென்று குச்சிகள்,ஓலை தட்டிகள், தார்ப்பாய்கள் கொண்டு போடப்பட்ட குடிசைகளை அகற்றப்பட்டதால் பரபரப்பு

மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சில வருடங்களாக அதிகாரிகளிடம் இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுத்து வந்ததாகவும் அவர்களுக்கு வீடு ஒதுக்கி தர வில்லை எனவும் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் இலவச வீட்டுமனை ஒதுக்க உங்கள் பகுதியில் புறம்போக்கு இடம் இல்லை இருந்தால் கூறுங்கள் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று அதிகாலை தாதன்குளம் பகுதியில் திடீரென்று சவுக்குக்குச்சிகள் விரிதட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் கொண்டு 50 க்கும் மேற்பட்ட குடிசைகள் ஆக்கிரமிப்பாளர்களால் போடப்பட்டது.

வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையி,காவல்துறை சார்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் மூலம் குடிசைகளை அகற்றக் கூறியும் அகற்றப்படவில்லை என தெரிகிறது. வட்டாட்சியர் டேனியல் பிரேம்குமார் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் காட்டுராஜா உள்ளிட்ட அலுவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

முடிவில் பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு எட்டப்படாத நிலையில் காவல்துறை டிஎஸ்பி சங்கர்,நத்தம் காவல் ஆய்வாளர் பொன் குணசேகரன், சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான காவல்துறையினர் தலைமையில் ஆக்கிரமிப்பாளர்களிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி அதில் தோல்வியில் முடிந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கிழங்கு மாவட்டச் செயலாளர் தமிழ்முகம்,இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்டச் செயலாளர் கரிகாலன் மற்றும் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர்
கைது செய்து நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

பேட்டி:கரிகாலன்
இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்
மூங்கில்பட்டி

அதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை,பொதுப்பணி துறையை சேர்ந்த அதிகாரிகள் பணியாளர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button