
தமிழகம் முழுவதும் மிலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், மாநகரப் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அரசு மதுபானக் கடை அருகே சோதனை நடத்தி
சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 1,190 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

