- ஐந்து நாட்கள் வங்கி வேலை நாட்களை நடைமுறைப்படுத்த வேண்டும்,
- பாகுபாடு நிறைந்த பி எல் ஐ (PLI) திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், அதனை அமலாக்கம் செய்வதையும் நிறுத்தி வைக்க வேண்டும்,
• தொழிற்சங்கங்களுடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் மூலம் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அகில இந்திய வேலை நிறுத்தமும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் தங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தமும் செய்யப்போவதாக AIBEA – AIBOC – NCBE – AIBOA – BEFI – INBEF – INBOC ஆகிய அனைத்து வங்கி சங்கங்களில் ஐக்கிய மன்றம் அறிவித்துள்ளது.
இந்நிகழ்வில் ஸ்டேட் பாங்க் மண்டல செயலாளர் கௌதம், ரவிக்குமார், கனரா வங்கி காமாட்சி, உள்ளிட்ட அனைத்து வங்கி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
இது குறித்து ஸ்டேட் பாங்க் துணை பொதுச் செயலாளர் ஜான் கிங்ஸ்டன் செய்தியாளரிடம் கூறுகையில் :
இந்திய அளவில் யுனைடெட் வங்கி சார்பில் நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
RBI உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஐந்து நாள் வேலைத்திட்டமே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர், வங்கிகளிலும் அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், அரசு இதற்கு ஒப்புதல் தர காலம் தாழ்த்தி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்ட வாரா கடனை தள்ளுபடி செய்வதிலேயே கவனம் கொள்கிறார்கள்.
ஆனால் எங்களுடைய கோரிக்கைகளை நிராகரிக்கிறார்கள் பி எல் ஐ (PLI) என சொல்லப்படுகிற இன்டர்ன்ஷிப் திட்டத்தினை வரையறை 4 அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 365 நாட்களும் கொடுப்பது போலவும், வரையறைக்கு உட்படாத ஊழியர்கள் அதிகாரிகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே வழங்கும் திட்டத்தினை தற்பொழுது அமல்படுத்தியுள்ளனர். இது குறித்த பேச்சுவார்த்தைக்கு கூட எங்களை அழைக்கவில்லை. எனவே, இதனை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
வரும் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி நாங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம், அதற்கு பிறகு தொடர் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.
எங்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் வரை நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் எனக்கூறினார்.