செய்திகள்

ஆந்திரா : ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38,379 மது பாட்டில்கள் அழிப்பு

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்தில், முனகபாகா பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறி 38,379 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த மது பாட்டில்களை அழிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து முனகபாகா அருகே உள்ள வுடா லேஅவுட் பகுதியில் சாலை ரோலர் மூலம் மது பாட்டில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் அனகாப்பள்ளி காவல் ஆய்வாளர் ஈஸ்வர் ராவ், உதவி ஆய்வாளர் பிரசாத் ராவ், கலால் உதவி ஆய்வாளர் லட்சுமிநாயுடு மற்றும் காவல்துறை, கலால் துறை பணியாளர்கள் கலந்து கொண்டு மது பாட்டில்களை அழித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button