
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடைபெற்றது. இதில்15 கடல்மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். காற்றின் வேகத்துக்கு ஏற்ப பாய்மரத்தை திறமையாக திருப்பி, வீரர்கள் படகுகளை ஒன்றையொன்று முந்திச் செல்லும் வகையில் போட்டியிட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இத்திருவிழாவை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



