
வேலூர் மாவட்டம் முள்ளிப்பாளையத்தில் இக்ரம் என்பவர் குளிர்பான கடைகளுக்கு விநியோகம் செய்யும் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். அந்த தொழிற்சாலையில் ஐஸ் பார்களை தயாரிக்கும் முறை குறித்து சோதனை நடைபெற்றபோது, திடீரென ஏற்பட்ட அம்மோனிய வாயு கசிவு ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் பரவியது. அப்போது, பணியில் இருந்த ஊழியர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வாயு கசிவு காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அமோனியம் வாயு சிலிண்டர்களை நீரில் கரைத்து, வாயுக் கசிவு தொடராமல் தடுத்தனர். இதை தொடர்ந்து, பெரியபாளையம் அருகே மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 18 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.