
தென்காசி மாவட்டம் கொக்குகுளத்தைச் சேர்ந்த காளிராஜ் தனது தந்தை வசித்து வந்த பழைய வீட்டை புதுப்பித்து புதிய மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, காளிராஜிடம் புதிய வீட்டிற்கான மின் இணைப்புக்கு விண்ணப்பிக்குமாறு வணிக ஆய்வாளர் கருப்பசாமி கூறியுள்ளார். இதை தொடர்ந்து, காளிராஜ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதற்கான கட்டணமாக ரூ.5,575 செலுத்தியதாக கூறியுள்ளார். பின்னர் அதே நாளில் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை வழங்கியபோது, வீட்டை நேரில் பார்வையிட்டு அறிக்கை அனுப்ப ரூ.2,000 வழங்க வேண்டும் என வணிக ஆய்வாளர் கருப்பசாமி கேட்டதாக லஞ்சம் வழங்க விரும்பாத காளிராஜ், புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வணிக ஆய்வாளர் கருப்பசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தென்காசி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.