க்ரைம்

கரூர் : சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – உறவினர்கள் தாக்குதல்

கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமியை மாணிக்கம் என்ற நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதை புரிந்து கொள்ள முடியாத சிறுமி வயிறு பகுதியில் வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிறுமி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த விபரீதம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமியின் பாட்டி மாணிக்கத்தை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மாணிக்கம் படுகாயமடைந்த நிலையில், இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் பாட்டியிடம் இருந்து அரிவாளை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து, தலை, காது, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்களுடன் இருந்த மாணிக்கம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button