க்ரைம்

ஓய்வு தலைமையாசிரியர் வீட்டில் 102 சவரன் தங்க நகை கொள்ளை – மர்ம நபருக்கு போலீசார் வலை



பெரம்பலூர் மாவட்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர், செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அப்போது, நேற்று காலை வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டறிந்து அவருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 102 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button