க்ரைம்

பள்ளியில் ரூ.1.51 கோடி கையாடல் புகார் – திமுக கவுன்சிலர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின் முறை பொது அபிவிருத்தி அறக்கட்டளைக்கு சொந்தமான சைவபானு ஷத்திரிய மேல்நிலைப் பள்ளியில் மணிமுருகன் மற்றும் முருகதாஸ் ஆகியோர் நிர்வாக பொறுப்பாளர்களாக இருந்தனர்.

இந்நிலையில், பள்ளியின் வைப்புத்தொகையாக இருந்த ரூ.1.51 கோடியை மற்ற நபர்களின் உதவியுடன் ரொக்கமாக பையில் வைத்து எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. இது குறித்து கேட்ட பொறுப்பு காசாளர் பாலனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, கடந்த 2022 ஆகஸ்ட் 12 முதல் 2024 மே 4 வரையிலான பள்ளியின் வரவு, செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டபோது, புதிதாக பொறுப்பேற்ற உதவிச்செயலர் பாஸ்கரன் முறைகேட்டை கண்டறிந்ததாக தெரிகிறது.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமுருகன், முருகதாஸ், பாபு மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் மணிமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button