செய்திகள்

சிவகங்கை : முதியோர் உதவித்தொகை வழங்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியைச் சேர்ந்த தனலட்சுமி-அன்னக்காளையம் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருந்தும், தங்களை கவனிக்க யாரும் இல்லை என்பதால் அரசின் முதியோர் உதவித்தொகையான, மாதம் ஆயிரத்து 200 ரூபாயை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதி உதவித்தொகை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்த மாதத்திற்கான தொகை இதுவரை கிடைக்கவில்லை. இது குறித்து மனு அளிக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதற்காக, பேருந்து கட்டணத்திற்கு 200 ரூபாய் கடன் வாங்கி வந்ததாக தம்பதியினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button