
தூத்துக்குடி திருவிக நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடியில் உள்ள வியட்நாமை சேர்ந்த வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 4 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை வடமாநிலர் தங்கியிருந்த வீட்டின் மீது எரிந்துவிட்டு சென்று உள்ளனர், இதில் வீட்டின் கண்ணாடிகள் உடைந்தும், வெளியில் இருந்த துணிகள் தீயில் கருகியும் சேதம் அடைந்துள்ள அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் மற்றும் பாதிப்புகள் ஏற்படவில்லை. இச்சம்பவம் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம கும்பலைச் சேர்ந்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.