செய்திகள்

அரவக்குறிச்சி : குடிநீர் பிரச்சனை – காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

அரவக்குறிச்சி மாவட்டம் தொக்குப்பட்டி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த மோட்டார், மூன்று மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது.

இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையடுத்து, மோட்டாரை உடனடியாக சரிசெய்து குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், அரவக்குறிச்சி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மோட்டார் பழுதை விரைவில் சரிசெய்து, குடிநீர் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து, மூன்று மாதங்களாக நீடித்து வரும் குடிநீர் பிரச்சனைக்கு அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button