
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் ராஜேஷ்வரி என்பவர், கணிப்பொறி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மாதவரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் இடையே, தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று மாலை மருத்துவமனைக்கு வருகை தந்த பிரகாஷ், பணியில் இருந்த ராஜேஸ்வரியுடன் தகராறு செய்ததோடு, அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர், தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதையடுத்து, தப்பியோடிய பிரகாஷை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இன்று காலை பிரகாஷை பிடிக்க முயற்சித்தபோது, தமிழரசன் என்ற உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து, பிரகாஷை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். பின்னர், காலில் காயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.