செய்திகள்

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டியை மீட்ட மீனவர்கள்

மேற்கு வங்க மாநிலம் மால்பஜார் பகுதியில் உள்ள டீஸ்டா ஆற்றில் மீனவர்கள் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் யானைக்குட்டி ஒன்று அடித்துச் செல்லப்படுவதை அவர்கள் கவனித்தனர்.

உடனடியாக யானைக்குட்டியை மீட்க முயன்றும், ஆற்றின் வேகம் காரணமாக அவர்களால் அதை நெருங்க முடியவில்லை.

இதையடுத்து, யானைக்குட்டி அடித்துச் செல்லப்பட்ட திசையில் தங்களது படகை செலுத்திய மீனவர்கள், சுமார் 3 கி.மீ. தூரம் அதை பின் தொடர்ந்தனர்.

பின்னர், நீரோட்டம் சற்று பாதுகாப்பான பகுதிக்கு சென்றதும் யானைக்குட்டியை மீட்டு, பத்திரமாக ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலறிந்து வந்த வனத்துறையினர், மீட்கப்பட்ட யானைக்குட்டியை அதன் தாயுடன் சேர்த்து வைத்தனர்.

யானைக்குட்டியை மீனவர்கள் ஆற்றில் இருந்து மீட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button