
மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே, கல்யாண் என்ற இடத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள், 40 லட்சம் ரூபாயை, வங்கியில் செலுத்த சென்றுள்ளனர். அப்போது, ஒரு கும்பல் அவர்களை தாக்கி பணத்தை பறித்து சென்றுவிட்டது.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார், 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.36 லட்சத்து 48 ஆயிரம் பணம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
