க்ரைம்
Trending

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு – அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்தார்

திண்டுக்கல், பழனி கோயில் நிலம் மோசடியாக பத்திர பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜஸ்டின் மணிகண்டனை பார்த்து விசாரணை நடத்தி ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜஸ்டின் மணிகண்டன் தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button