க்ரைம்

தூத்துக்குடி : முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டம் – போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் லயன்ஸ் டவுன் தெரு பகுதிகளில் 20-ம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் முகத்தை துணியால் மறைத்தபடி சுற்றித்திரிந்தனர் .

இதையடுத்து, ஆளில்லாமல் பூட்டிக் கிடந்த 2 வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முகமூடி அணிந்த நபர்கள் அப்பகுதியில் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து, முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளதால், லயன்ஸ் டவுன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button