செய்திகள்

அன்னதான நிகழ்ச்சியில் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த பெண் பலி

ஆந்திர மாநிலம் விஜயவாடா சிட்டிநகர் பகுதியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அன்னதானத்திற்காக தயாரிக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தை கீழே இறக்கி வைக்கும் போது, எதிர்பாராதவிதமாக சுஜாதா என்ற பெண் அதில் தவறி விழுந்தார்.

இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த சுஜாதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button