செய்திகள்

ஆவடி : குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் சாலைமறியல்

ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை, ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்களுக்கு, அணைகட்டுச்சேரி ஆற்றுப்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து, தெரு குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பட்டாபிராம் ஏரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தண்டுரை வாழைத்தோப்பு, கந்தசாமி நகர் வழியாக, மேற்கண்ட ஆழ்துளை கிணறை சுற்றி தேங்கி நிற்கிறது. அந்த கழிவுநீர் நிலத்தில் இறங்கி மாசடைந்துள்ளது.

இதனால், ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் கழிவுநீர் வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த , 15-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பட்டாபிராம்–பாரிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த தகவலறிந்து வந்த போலீசாரும் குடிநீர் வாரிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button