
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால கோரிக்கைக்கு போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி இருக்கினார். இதையடுத்து, 81-வது ஐ.நா பொதுசபை கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். இதனிடையே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பினராக இந்தியா நீண்ட காலமாகவே முயன்று வருகிறது. இந்த முயற்சிக்கு போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தோ பசிப்பிக் பிராந்தியத்தில், வளர்ந்துவரும் சக்தியாக இந்தியா இருப்பதால், ஐ.நா அமைப்பில் நிரந்தர இடம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். உலகளாவிய அமைதி, பருவநிலை பாதுகாப்பு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பது போன்றவை, சர்வதேச நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் மட்டுமே சாத்தியமாகும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.


