
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன். இவரை, ஒரு கும்பல் நேற்றிரவு, மதுபாட்டிலால் அடித்து கொலை செய்தது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதனின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக, 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, கடந்த 18-ஆம் தேதி புதுச்சேரியில் பிரபல ரவுடி ஆனந்த் கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.