
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலால் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
பேருந்தில் இடம் இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளிலும், பேருந்தின் பின்புறத்திலும் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கிறது. இதனால் விபத்து ஏற்பட்டு காயங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
நேற்று ஒடுகத்தூர் பகுதியில் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இது போன்ற ஆபத்தான பயணங்களைத் தடுக்க அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கதவுகள் பொருத்தவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



