க்ரைம்

புளியங்குடி : வீட்டின் பூட்டை உடைத்து 75 கிராம் நகை கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி கற்பக வீதி தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சுதா, வடநத்தம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

இதையடுத்து, மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய முத்துக்குமார் மற்றும் சுதா, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதில் வைத்திருந்த சுமார் 75 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button