
தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியை சேர்ந்தவர் இசக்கிராஜ். இவர், வேலவன் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் வாங்கிய, 5 சவரன் நகையை அடகு வைத்தபோது, அதன் தரம் குறைவாக இருந்துள்ளது.
இதை, வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவன மேலாளர் சரவணகுமாரிடம், இசக்கிராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அடகு தொகை, ரூ. 4 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை செலுத்திய வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனம், நகையை தரும்படி கேட்டுள்ளது.
இசக்கிராஜ், அந்த நகையை கொடுக்காமல் இழுத்தடித்ததால் அவர் மீது, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புகார் அளித்தது.
இந்த விவகாரத்தை பேசி முடிக்க வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் மகாராஜனை இசக்கிராஜா சந்தித்துள்ளார்.
அப்போது ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக மகாராஜன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இசக்கிராஜா கைது செய்யப்பட்டார்.
பின்னர், கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போலீசார் அவர்களை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இசக்கிராஜா, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சட்டசபை தேர்தலில், சசிகலா கட்சி சார்பாக, விருதுநகர் மாவட்டம், சாத்துார் தொகுதியில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை எதிர்த்து, களமிறக்கப்பட்டவர் தான், இந்த இசக்கிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
