செய்திகள்

ஆந்திரா : ரயிலில் அடிப்பட்டு 4 வாலிபர்கள் பலி

ஆந்திர மாநிலம் டெக்கலி அருகே ராவிலசா பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ரயிலில் அடிபட்டு 4 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார். இந்த தகவலறிந்த போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த முதற்கட்ட விசாரணையில் ராவிலசா பகுதியில் தண்டவாளம் அருகே தேங்கியிருந்த வெள்ள நீரில் மீன்பிடிக்க சில வாலிபர்கள் சென்ற போது அந்த வழியாக வந்த ராஜாராணி எக்ஸ்பிரஸ் ரயிலை அவர்கள் கவனிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், இயற்கை உபாதை கழிப்பதற்காக தண்டவாளம் அருகே சென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button