
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு குறைந்த அளவே பொதுமக்களுக்கு மாநகராட்சி வழங்கிவருகிறது .
குடிநீர் நீராதார பகுதிகளில் போதிய மழைபொழிவு இல்லாத நிலையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்க முடியாத நிலையில் இரவு நேரங்களில் வழங்குவது , சுத்திகரிக்காமல் வழங்குவது என மாநகராட்சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் பொதுமக்களால் பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளது . மேலும் குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பயன்படுத்தி அதிக நீரை சிலர் மட்டும் எடுத்து வருவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு பகுதியில் தரமற்ற சுத்திகரிக்கப்படாத குடிநீரை பயன்பாட்டுக்காக துணிகளைக்கொண்டு வடிகட்டி குடங்களில் பிடிக்கும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது