தாய்லாந்து நாட்டுக்கு இணையாக முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் வியட்நாம்க்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பணித்த படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரும் ஆந்திராவைச் சேர்ந்த மூவரும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேரும் அடங்குவர்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வியட்நாமில் உள்ள தீவுக்கு இடையே சுற்றுலா படகில் பயணம் மேற்கொண்ட போது திடீர் என ஏற்பட்ட விபத்தில் பல தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு பின் வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய துணை தூதராக இணைந்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டனர். இதற்கிடையே தமிழ்நாட்டைச் சேர்ந்த உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து தாயகம் கொண்டு வர தமிழ்நாடு அரசு சார்பிலும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதன்படி வியட்நாமிலிருந்து 15 இந்தியர்களின் உடல்கள் திங்கட்கிழமை இரவு விமான மூலம் மும்பை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன அங்கு சுங்கம் குடியுரிமை மற்றும் பிற சட்டபூர்வ நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் அந்தந்த மாநில உயிழந்தவரிகளின் உடல் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுக்கு விமானங்களும் அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன இதில் முதல் கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரவிசங்கர் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விநயக்குமார் ஆகியோரின் உடல்கள் இன்று காலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மும்பையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
சென்னை பழைய விமான நிலைய கார்கோ பகுதியில் இண்டிகோ ஏர்லைன்ஸ் வளாகத்தில் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டு கு
உடல்கள் ஒப்படைக்கும் பணி நடைபெற்றது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வினயகுமார் உடலை பெற்றுக் கொள்வதற்காக அவரது குடும்பத்தில் இருந்து ஒரு சில விமான நிலையம் வந்திருந்தனர் அவர்களிடம் அதிகாரிகள் உடலை ஒப்படைத்து அரசு ஏற்பாடு செய்த சிறப்பு வாகனத்தில் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ரவிசங்கரின் குடும்பத்தினர் சென்னை விமான நிலையத்திற்கு வராததால் அவரது உடலை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைத்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இருவரின் உடலுக்கும் சென்னை விமான நிலையத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்படும் ஈடுபட்டார்.
இதற்கிடையே சென்னை மாவட்டம் அகரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியை சேர்ந்த பாபு ஆகியோரின் உடல்கள் இன்று மதியம் 12 மணியளவில் மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.மேலும் மீதமுள்ள ஆறு பேர் உடல்களும் கோயம்புத்தூர் விமான நிலையம் வழியாக அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினயகுமார் உடலை பெற்றுக் கொள்ள வந்த அவரது மாமனார் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்,
வியட்நாமில் நடைபெற்ற லாவா நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எனது மருமகன் வினயகுமார் அங்கு சென்று இருந்தார் கூட்டம் நடைபெறும் தீவுக்கு செல்ல படகில் பயணித்த போது எதிர்பாராத விபத்து ஏற்பட்ட அவர் உயிரிழந்த இந்த சம்பவம் எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து நடந்த தகவல் கிடைத்த உடனே தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசின் அதிகாரிகள் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர் வேலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வினோத் கண்ணன் டிஐஜி சந்தோஷ் உள்ளிட்டோர் உடலை விரைவாக தாயகம் கொண்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தனர்.
அதேபோல் வியட்னாநாமில் உள்ள இந்திய துணைத் தூதராக அதிகாரி பிரியங்கா தொடர்ந்து இருந்து அங்குள்ள ஒவ்வொரு நடவடிக்கையையும் உடனுக்குடன் எங்களுக்கு தெரிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்.
இன்று வேலூரில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் உடலை வீட்டிற்கு கொண்டு சென்ற பிறகு குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக வைப்பதில் சிரமம் ஏற்படக்கூடும் என கவலைப்படும் இதனை அறிந்த வேலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வினோத் கண்ணன் மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி ஜெனரேட்டர் மூலம் தடையில்லா மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
எங்களின் துயரமான நிறத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் இந்திய தூதரக அதிகாரிகளும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் மற்றும் டிஐஜி சந்தோஷ் ஆகியோரும் மனிதநேயத்துடன் செயல்பட்டு உறுதியாக இருந்தார் அவர்களின் உதவியை எங்கள் குடும்பம் வானொலி மறக்காது அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என இவ்வாறு கூறினார்.

