அரசியல்டிரெண்டிங்

TVK, DMK, ADMK மூன்றும் ஒன்று தான் : செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு

அதிமுக திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் தலைவர்கள் அனைவரும் ஒன்று சொன்னது போல் செவிலியர்களை நிரந்தரம் செய்யவில்லை என்று செவிலியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சென்னை மாவட்ட மையம் மாவட்டத்தில் தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர்கள் மனு வழங்கினர்

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில்

தமிழ்நாடு அரசின் பொது சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையில் மருத்துவ ஊழியர்களை தொகுப்பூதிய முறையில் பணியமத்துவதை அரசு கைவிட வேண்டும்

செவிலியர்களின் ரெடிப்ப்ளாய்மெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

IPHS மற்றும் NMC விதிமுறைப்படி புதிய பணியிடங்களை மருத்துவத்துறையில் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை

கடந்த பத்து வருடமாக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும்

செவிலியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த இரண்டு ஆட்சியாளர்களும் தங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை ஆனால் தேர்தல் வாக்குறுதியில் தங்களை தமிழக வெற்றி கழக தலைவரும் தற்போதைய முதல்வரும் ஆன ஜோசப் விஜய் தெரிவித்திருந்தார் இந்நிலையில் உங்களுக்கு எதிரான கையெழுத்தை அவர் போடுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை வழங்கினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button